| லாரிகளில் ஆயத்த ஆடை திருடும் கும்பல்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி Dinamalar
லாரிகளில் ஆயத்த ஆடை திருடும் கும்பல்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:01

திருப்பூர்;திருப்பூரிலிருந்து செல்லும் ஏற்றுமதி ஆடைகளை, விருதுநகர் பகுதியில் திருடி விற்பனை செய்துவந்த கும்பல் குறித்து 'திடுக்' தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களிலிருந்து துாத்துக்குடி துறைமுகம் மூலம், வெளிநாடுகளுக்கு பின்னலாடைகள் அனுப்புகின்றன.இந்நிலையில், சுங்க அதிகாரிகள் துறை முகத்தில் நடத்திய ஆய்வில், திருப்பூரை சேர்ந்த நான்கு ஏற்றுமதி நிறுவனங்கள் அனுப்பிய சரக்கில் ஒவ்வொரு நிறுவனத்தின் சரக்கிலும், 300 முதல் 400 ஆடைகள் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.இதனால், சுங்க வரித்துறை, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. சலுகைக்காக, ஆவணத்தில் அதிகமாக குறிப்பிட்டு, குறைவான சரக்குகளை ஏற்றுமதிக்கு அனுப்புவதாக, சுங்க வரித்துறை கருதுகிறது.இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஏற்றுமதி நிறுவனத்தினர், நேற்று துாத்துக்குடி துறைமுகம் விரைந்தனர். சரக்குடன் சென்ற வாகன டிரைவர்களிடம் விசாரித்தனர்; இதில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.திருட்டு கும்பல்துாத்துக்குடி துறைமுகம் செல்லும் வழியில், விருதுநகர் மாவட்டம், பந்தல்குடியில் வாகனத்தை நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். டிரைவர்களின் ஆசியுடன், அப்பகுதியைச்சேர்ந்த ஒரு கும்பல், ஆடைகளை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.சந்தேகம் ஏற்படாமலிருக்க, ஒவ்வொரு பெட்டியிலும், 5 ஆடைகள் வீதம் திருடுகின்றனர்; மீண்டும் 'டேப்' வைத்து ஒட்டிவிடுகின்றனர். இதற்காக, குறிப்பிட்ட தொகையை, டிரைவர்களுக்கு, திருட்டு கும்பல் வழங்குவதும் தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆடை திருட்டு நடந்துவந்துள்ளது.ஜி.பி.எஸ்., கருவி பொருத்த முடிவுதிருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:சரக்கு குறைவாக ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை, ஏமாற்றும் நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கவும்; மேல் நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.குறைந்த எண்ணிக்கை ஆடை அனுப்பினால், வெளிநாட்டு வர்த்தகர்கள், மொத்த மதிப்பில், பெருந்தொகையை பிடித்தம் செய்துவிடுவர்; புதிய ஆர்டர்கள் வழங்க மறுப்பர். இவ்வாறு, பல்வேறு நெருக்கடிகளை ஏற்றுமதி நிறுவனம் சந்திக்க நேரிடுகிறது.ஆடை குறைவுக்கான காரணத்தை கண்டறிவதற்காக, ஏற்றுமதி நிறுவனங்கள், விசாரணையை துவக்கின. இந்த விசாரணையில், டிரைவர்களின் உதவியுடன், ஒரு கும்பல், பின்னலாடைகளை திருடி, உள்ளூரில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.இந்த கும்பல் மீது, துாத்துக்குடி துறைமுகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில், திருப்பூர் போலீஸ் கமிஷனர் சஞ்சைகுமாரை சந்தித்து புகார் அளித்துள்ளோம். சரக்கு அனுப்பும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும். கண்டெய்னர்களை பூட்டி, சீல் வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X