எதிர்ப்பு! பெரியாறு அணையிலிருந்து நேரடியாக குடிநீர் எடுக்க ... விளைநிலங்கள் தரிசாகும் என விவசாயிகள் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 ஜூன்
2019
02:54
பதிவு செய்த நாள்
ஜூன் 26,2019 01:24

மதுரை : பெரியாறு அணையிலிருந்து நேரடியாக குடிநீர் எடுத்தால் விவசாயம் பாதிக்கப்படும். விளைநிலங்கள் தரிசாகும் என மதுரையில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் தலைமையில் வேளாண் இணை இயக்குனர் குமாரவடிவேலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) உமா, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ், தோட்டக்கலை துணை இயக்குனர் பூபதி, உதவி இயக்குனர் கலைச் செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் நடந்த விவாதம்தனிக்கொடி : உசிலம்பட்டி அருகே விவசாயிகள் இணைந்து குழு அமைத்து விளைபொருட்களை மதிப்புகூட்டி உற்பத்தி செய்கிறோம்.



தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் தரமாக உற்பத்தி செய்கிறோம். ஆனால் எங்கள் பொருட்களை கொள்முதல் செய்யாததால் நஷ்டம் ஏற்படுகிறது.வேளாண் விற்பனை குழு தலைவர் தவசுமுத்து: தயாரிக்கும் பொருட்களுக்கு அக்மார்க் முத்திரை பெற்றால் உழவர் சந்தைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.தனிக்கொடி : அக்மார்க் முத்திரை பெற்றுள்ளோம். இதுவரை வேளாண் விற்பனை குழுவினர் உற்பத்தி கூடத்திற்கு வந்தது இல்லை.



கலெக்டர்: இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.திருப்பதி: சொட்டு நீர் பாசன திட்டத்தில் பல முறைகேடுகள் நடக்கின்றன. நுாறு சதவீதம் மானியம் என கூறும் அதிகாரிகள் பள்ளம் தோண்ட, குழாய்கள் பதிக்க பணம் வழங்குவதில்லை.ரவி: விவசாய மின் இணைப்பு வழங்கவும் இத்திட்டத்தில் நிதியுதவி வழங்க வேண்டும்.கர்ணன்: சொட்டு நீர் பாசன உபகரணங்களை குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மட்டுமே அதிகாரிகள் வாங்குகின்றனர். அவை தரமற்றதாக உள்ளன.வேளாண் அதிகாரி: அரசு விதிகளுக்குட்பட்டு சொட்டு நீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



வேளாண் இணை இயக்குனர்: 13 ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், மற்றவர்களுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கோபாலகிருஷ்ணன்: வறட்சியால் விவசாயம் பல ஆண்டுகளாக மேலுார் பகுதியில் இல்லை. இந்நிலையில் பெரியாறு அணையிலிருந்து நேரடியாக குடிநீர் எடுப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படும். மாரிச்சாமி: விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் ஒரு நபருக்கு 125 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.



ராமன்: பெரியாறு அணைக்கு பதிலாக தாமிரபரணி ஆற்றிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரலாம்.கலெக்டர்: இதுகுறித்து மனு அளித்தால் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். மாரிச்சாமி, ராஜமாணிக்கம்: பெரியாறு அணையிலிருந்து நேரடியாக குடிநீர் எடுத்தால் விளைநிலங்கள் தரிசாகி விடும். ஒரு நபருக்கு 125 லிட்டர் என்றால் பல லட்சம் பேருக்கு அதிக தண்ணீர் தேவைப்படும்.கலெக்டர்: பெரியாறு அணையிலிருந்து நேரடியாக பெறப்படும் குடிநீரிலிருந்து வழங்கப்போவதில்லை.



தற்போதுள்ள வைகை இரு திட்டங்கள், காவிரி திட்டம், போர்வெல்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரிலிருந்து தான் விநியோகிக்கப்படுகிறது.முருகன், ராஜமாணிக்கம்: நீர் மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படாததால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. நீர் பங்கீடு முறையாக நடப்பதில்லை.கலெக்டர்: இதுகுறித்து தனியாக கூட்டம் நடத்தி ஆலோசிக்கலாம். பாண்டியன்: உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டம் 108 கோடி ரூபாயில் 25 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளது.



ஆனால் இதில் பாலங்களில் உடைப்பு மற்றும் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும்.மணிகண்டன்: இத்திட்டத்தில் பயன்பெறும் 33 கண்மாய்களை அடையாளம் காட்ட வேண்டும். வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.கலெக்டர்: இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.பழனிச்சாமி: அரவை செய்த கரும்புக்கு அலங்காநல்லுார் ஆலை நிர்வாகம் 19 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. கரும்பு வெட்டு கூலி வழங்கப்படவில்லை. மேலும் கரும்பு விவசாயிகள் பெற்ற வங்கி கடனுக்கு அவர்கள் நுாறு நாள் வேலை திட்ட சம்பளத்தை பிடித்தம் செய்கின்றனர்.



கலெக்டர்: வங்கி கடனுக்காக நுாறு நாள்வேலை திட்ட சம்பளத்தை பிடித்தம் செய்ய கூடாது என அறிவுறுத்தப்படும்.தனிக்கொடி: ஏழாண்டுகளாக இம்மாவட்டத்தில் பருவமழை இல்லை. விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது. வேளாண்மை, தோட்டக்கலைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் (பொறுப்பு) வழங்கினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X