ரூ.1.26 கோடி மோசடி சினிமா தயாரிப்பாளர், மகன் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:26

சிவகங்கை : தொழிலதிபரிடம் 18 கோடி ரூபாய் கடன் பெற்றுத்தருவதாக கூறி கமிஷனாக பெற்ற 1.26 கோடி ரூபாயை மோசடி செய்தமதுரையை சேர்ந்தசினிமா தயாரிப்பாளர் காளையப்பன் 52, அவரது மகன் ஐயப்பன் 26, இருவரையும் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.



புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சிதம்பரம் மகன் ரமேஷ் 41. மெட்ரிக் பள்ளி தாளாளர். பள்ளிக்கு 18 கோடி ரூபாய் கடன் பெற முயற்சித்தார். இதற்காக காரைக்குடியை சேர்ந்த சண்முகநாதன், ராமநாதன் ஆகியோரை தொடர்பு கொண்டார்.அவர்கள் மதுரை பைபாஸ் ரோடு எஸ்.பி.ஓ.ஏ., காலனியை சேர்ந்த பட தயாரிப்பாளர் காளையப்பனுக்கு கமிஷன் கொடுத்தால், காரைக்குடியில் உள்ள பெரிய தொழில் அதிபரிடம் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத்தருவார் என கூறியுள்ளனர்.



இதை நம்பிய ரமேஷ், காளையப்பன் வங்கி கணக்கில் பல தவணையாகவும், நேரடியாகவும் 1.26 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் கடன் பெற்றுத்தரவில்லை.இது குறித்து கேட்ட ரமேைஷ காளையப்பன், அவரது தம்பி சரவணன் 44, காளையப்பனின் மகன் ஐயப்பன் ஆகியோர் மிரட்டியுள்ளனர்.சிவகங்கை எஸ்.பி.,ஜெயச்சந்திரனிடம் ரமேஷ் புகார் அளித்தார்.



மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி, எஸ்.ஐ.,க்கள் லட்சுமி, அருள்மொழிவர்மன், சிறப்பு எஸ்.ஐ., மைக்கேல், போலீசார் திருமுருகன் ஆகியோர் 5 பேர் மீது வழக்கு பதிந்து, காளையப்பன், ஐயப்பனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.காளையப்பன் மதுரை மணிக்குறவன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துஉள்ளார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X