| ஆதிதிராவிடருக்கான வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடிகள் Dinamalar
ஆதிதிராவிடருக்கான வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:30

மதுரை : மதுரை மாநகராட்சியில் ஆதிதிராவிடர்களுக்கான வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர்.தமிழகத்தில் ரத்தான உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன.



இதற்காக வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்பின், வார்டுகள் ஒதுக்கீடு பணி முடிந்து அரசிதழில் வெளியிடப்பட்டது. முதல் முறையாக பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சியை பொருத்தவரை 100 வார்டுகள் உள்ளன. பெண்கள் பொது பிரிவுக்கு 46, ஆதிதிராவிட பெண்களுக்கு 4 என 50 வார்டுகள் பெண்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 வார்டுகளில் மூன்று வார்டுகள் ஆதிதிராவிடர் பொது வார்டாகவும், இதர 47 வார்டுகள் பொது வார்டுகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.



ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளை தவிர்த்து, குறைவான எண்ணிக்கையில் வசிக்கும் சில வார்டுகளை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 61வது வார்டை ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்புள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் போன்றவை கமிஷனர் விசாகனிடம் மனுக்கள் அளித்தனர். மனுக்களில், 'எங்கள் வார்டில் ஆதிதிராவிடர்கள் மிக குறைந்த அளவில் உள்ளனர்.



மற்ற பிரிவினரே அதிகம். ஆனால் அதிகாரிகளின் தவறுதலான கணக்கெடுப்பால் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதிகம் வசிக்கும் வார்டுகள் பொது வார்டுகளாக உள்ளன. இக்குளறுபடியை களைய வேண்டும்,' என குறிப்பிட்டனர். இதுகுறித்து விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார்.அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கணக்கெடுப்பு நடத்தப்பட்டது சரிதானா, 61வது வார்டை ஆதி திராவிடர் பெண்களுக்கு ஒதுக்கியதில் தவறு உள்ளதா என விசாரிக்கிறோம். தவறு இருப்பின் திருத்தம் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X