போலீஸ் செய்திகள் ................
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:32

கொள்ளை திட்டம்; ஆயுதங்களுடன் 7 பேர் கைதுமதுரை: எஸ்.எஸ்.காலனி எஸ்.ஐ., மகேந்திரன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு பொன்மேனியில் ரோந்து சென்றனர். கார் ஒன்று அருகில் 7 பேர் நின்றனர். விசாரித்தபோது கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் காத்திருந்தது தெரிந்தது. சொக்கலிங்க நகர் மகேந்திரன் 40, ஆரப்பாளையம் கண்மாய்கரை உதயகுமார், காளவாசல் பாண்டியன்நகர் பாண்டி 21, முரட்டன்பத்திரி ஆனந்தராஜ் 21, சம்மட்டிபுரம் அருண்குமார், 21, முத்துப்பாண்டி 22, கருமாத்துார் அஜித்குமார் எனத்தெரிந்தது.



இவர்களிடம் ஒரு கார், இரண்டு கத்திகள், ஒரு அரிவாள், இரண்டு உருட்டு கட்டைகள், மிளகாய் பொடி, 7 அலைபேசிகள், 41 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.மதுரையில் திருப்பூர் ரவுடி அட்டகாசம்மதுரை: கோச்சடை அசோக்நகர் கணேஷ்ராஜா 34. பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர் ரவுடி மதன். நேற்றுமுன்தினம் இவரது வீட்டிற்கு தன் ஆட்களுடன் சென்ற மதன், பணம் கேட்டு மிரட்டியதுடன் நாலரை பவுன் நகைகள், 60 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு, கணேஷ்ராஜாவின் காரையும் எடுத்து தப்பினர்.



எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.ராஜஸ்தானில் இருந்து வந்து கைவரிசைமதுரை: ஜடாமுனி கோயில் தெருவில் ஜவுளி குடோன் வைத்திருப்பவர் மனோகர். இவரது கடையில் 10 நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம் சுமோசிங் 30, வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாற்று சாவி மூலம் குடோனில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளி பண்டல்களை திருடிச்சென்றார். தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.'காட்டிக் கொடுப்பாயா...'அண்ணனுக்கு தம்பி 'கவனிப்பு'மதுரை: மகபூப்பாளையம் கணேஷ்பாபு.



இவரது தம்பி 'தக்காளி' பாபு 40. பாபு வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் தொடர்பு உடையவர். அவர் இருக்கும்இடத்தை கணேஷ்பாபு காட்டிக்கொடுத்ததாக கருதிய பாபு, அண்ணனை கொல்ல முடிவு செய்தார். நேற்றுமுன்தினம் மேலமாரட்வீதியில் இருவரும் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட, செங்கல்லால் தாக்கியதில் கணேஷ்பாபு காயமுற்றார். திலகர்திடல் போலீசாரால் பாபு கைது செய்யப்பட்டார்.பெண் உடையில் வலம் வரும் திருடன்மதுரை: புதுார், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுரிதார் அணிந்து முகத்தை மூடி கொண்டு இரவு வீடுகளை நோட்டமிடுவதும், தனியாக வசிக்கும் பெண்களின் நகையை பறிப்பதுமாக குற்றச்செயல்களில் மர்மநபர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.



அவரது உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர். மோசடி: எல்.ஐ.சி., முகவர் உட்பட 2 பேர் கைதுமதுரை: புதுராமநாதபுரம் ரோடு துவாரகன் 51. ஒட்டன்சத்திரம் எல்.ஐ.சி., முகவர் நடராஜனிடம் 5 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு சேர்ந்து மாதம் 12500 ரூபாய் செலுத்தி வந்தார். இத்தொகையை நடராஜன் மருமகன் மகுடீஸ்வரன் நேரில் வந்து பெற்றுசெல்வார். மொத்தம் 3.12 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், ஏலச்சீட்டு தொகையை தராமல் இருவரும் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.5 பவுன் நகைகள் பறிப்புதிருமங்கலம்: இப்பகுதி அழகுசிறையைச் சேர்ந்தவர் சமையன். கருமாத்துாரில் டெய்லர் கடை வைத்துள்ளார்.



இவரது மனைவி முத்துலட்சுமி. நேற்று முன் தினம் இரவு இருவரும் காற்றிற்காக கதவை திறந்துவைத்துவிட்டு துாங்கியபோது முத்துலட்சுமியின் 5 பவுன் தங்க செயினை மர்மநபர் திருடிச்சென்றார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் கேட்டு தகராறுதிருமங்கலம்: அம்மாபட்டி வலையபட்டி மாரியப்பன் 46. இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் பாண்டியராஜன் 24, காதலித்தார். மாரியப்பன் வீட்டிற்கு பெண் கேட்டு உறவினர்களுடன் நாராயணன் சென்றபோது தரமறுத்தார். ஆத்திரமுற்று மாரியப்பனை தாக்கியதாக நாராயணன், மனைவி பாப்பா, பாண்டியராஜன் மீது சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது பேரையூர்: மெய்யனுத்தம்பட்டி முருகேசன் 42. இவர் அனுமதியின்றி மது விற்றார். சாப்டூர் போலீசார் அவரை கைது செய்து 84 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். குப்பல்நத்தத்தில் மது விற்ற காசியம்மாளையும் கைது செய்து 14 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.போலி போலீசார் 4 பேர் கைது உசிலம்பட்டி: தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவர் ஞானமுருகன் 50. தனிப்படை போலீசார் எனக் கூறி இவரை நான்கு பேர் பிடித்துச் சென்றனர்.



வழக்கு பதியாமல் இருக்க 30 ஆயிரம் ரூபாய் தர கூறினர். ஞானமுருகன் நண்பருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உசிலம்பட்டி போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் விசாரித்ததில் மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் பணிநீக்கப்பட்ட போலீஸ்காரர் கணேசன் 52, அரசு பஸ் டிரைவர் ராமன் 42, கருமாத்துார் அன்புமாயன் 38, தும்மக்குண்டு சுரேஷ் 35, என தெரிந்தது. நால்வரும் தனிப்படை போலீசார் என ஏமாற்றி பணம் பறிப்பதும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.



விஷம் குடித்து பெண் தற்கொலைஅலங்காநல்லுார்: தாதகவுண்டன்பட்டி முருகன் மகள் மஞ்சுளா 19. இவரது கணவர் பாலமுருகன் 27. வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் வசித்து வந்த கணவன், மனைவிக்கும் அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டது. பெற்றோர் வீட்டிற்குமஞ்சுளா திரும்பி வந்தார். வீட்டில் விஷம் குடித்து மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி 10 மாதங்களே ஆனதால் மதுரை ஆர்.டி.ஓ., முருகானந்தமும் விசாரிக்கிறார்.



குடிக்க பணம் தராததால் தற்கொலைதிருமங்கலம்: கூடக்கோவில் வெள்ளைமுத்து 45. சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லவில்லை. மனைவி பாண்டிசெல்வி கூலிவேலை மற்றும் 100 நாள் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை வெள்ளைமுத்து குடித்து வந்தார். நேற்று முன்தினம் மனைவி பணம் தராததால் விஷம் குடித்து வெள்ளைமுத்து தற்கொலை செய்து கொண்டார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X