| காந்தி சிலை அகற்றம் குறித்த சமாதான கூட்டம் தோல்வி Dinamalar
காந்தி சிலை அகற்றம் குறித்த சமாதான கூட்டம் தோல்வி
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:51

விழுப்புரம்:விழுப்புரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக காந்தி சிலை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகள், காங்., கட்சி நிர்வாகிகளுடனான சமாதான கூட்டம் தோல்வியில் முடிந்தது.


விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் நேருஜி சாலையில் விரிவாக்க பணிகள் நடக்கிறது. பணிகளையொட்டி நேருஜி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், இடையூறாக உள்ள கோவில்கள், தேவாலயம், மசூதி, அரசியல் கட்சி மற்றும் தலைவர்களின் சிலைகள் ஆகியவற்றை அகற்ற நெடுஞ்சாலை துறை, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் மூலம் காந்தி சிலையை அகற்ற பள்ளம் தோண்டினர். இதற்கு காங்., பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர்.அதனைத் தொடர்ந்து நேற்று விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.டி.எஸ்.பி., திருமால், நெடுஞ்சாலை உதவி பொறியாளர் வினோதினி, காங்., மத்திய மாவட்ட தலைவர் சீனுவாசகுமார், நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தயானந்தம், மாநில பொதுக்குழு சிவா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றினால், காந்தி சிலையை அகற்றி, வேறு இடத்தில் வைக்க ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினர். மேலும், காந்தி சிலை பொதுவானது. வணிகர்கள் மற்றும் ஆலயங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பை விடுத்திருக்க வேண்டும் என திடீர் வாக்குவாதம் செய்தனர்.சுமூகமான முடிவுகள் ஏதும் ஏற்படாததால் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X