| நாளை மாஜி படைவீரர்கள் குறைகேட்பு முகாம் Dinamalar
நாளை மாஜி படைவீரர்கள் குறைகேட்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:53

விழுப்புரம்:முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நாளை 27ம் தேதி சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் நடக்கிறது.


கலெக்டர் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மேற்கு சண்முகபுரம் காலனி, சேர்மன் சிதம்பரம் தெருவில் உள்ள, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நாளை 27ம் தேதி காலை 11:00 மணிக்கு முன்னாள் படைவீரர்கள், படைவீரர் குடும்பத்திற்கான குறைகேட்பு நாள் கூட்டம் நடக்கிறது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையினை தனித்தனி மனுக்களாக எழுதி அடையாள அட்டை நகலுடன் உதவி இயக்குநரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். அத்துடன் முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர்கள் அசல் படைப்பணிச் சான்றுடன் வருகை புரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மக்கள் தொடர்பு திட்ட முகாம்வானுார் கடப்பேரிக்குப்பம் கிராமத்தில் நாளை 27ம் தேதி காலை 11:00 மணிக்கு டி.ஆர்.ஓ., தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. இம்முகாமில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக முன்னதாகவே கொடுத்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X