| மாணவர்களுக்கு அலர்ஜி ஆய்வு நடத்த கோரிக்கை Dinamalar
மாணவர்களுக்கு அலர்ஜி ஆய்வு நடத்த கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:53

செஞ்சி:செஞ்சி பகுதி பள்ளிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களில் தோல் அலர்ஜிக்கு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.


செஞ்சி நகரம் மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக உடலில் சிவந்த நிறத்தில் தோல் தடித்தும், அரிப்பும் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் துவங்கி இந்த வகை அலர்ஜி பள்ளி மாணவர்களிடையே பரவி வருகிறது.பல இடங்களில் பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு அரிப்பு அதிகரித்ததால், ஆசிரியர்களே மாணவர்களை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர். நேற்று செஞ்சியில் உள்ள பெரும்பாலான தனியார், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், செஞ்சி அருகே உள்ள அப்பம்பட்டு, கோணை, அன்னமங்கலம், வடவானுார், களையூர், பொன்பத்தி, உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் காலை முதல் மாலை வரை தொடர்ந்து சிகிச்சைக்கு வந்தனர்.நேற்று மட்டும் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்கு வந்துள்ளனர். இதே போல் தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.பள்ளி மாணவர்களிடம் இந்த அலர்ஜி மேலும் பரவாமல் இருக்க செஞ்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மருத்துவக் குழுவினரை கொண்டு விரிவான சோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X