| மேம்பாலத்தில் விபத்து அபாயம் :பராமரிப்பு இல்லாததால் சிக்கல் Dinamalar
மேம்பாலத்தில் விபத்து அபாயம் :பராமரிப்பு இல்லாததால் சிக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:55

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, மேம்பாலம் பராமரிப்பின்றி மண் படிந்து இருப்பதால், விபத்து ஏற்படுகிறது.பொள்ளாச்சி வடக்கிபாளையம் ரோடு ஆ.சங்கம்பாளையத்தில், பொள்ளாச்சி - போத்தனுார் ரயில்பாதை குறுக்கிடுகிறது. ரயில்பாதையை கடக்க, மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் உள்ள மேம்பாலங்களிலேயே, இந்த பாலம் வளைவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்துகளும் அதிகம் நடக்கிறது.மேம்பாலத்தில் மின்விளக்கு அமைக்கப்படாததால், இரவில் இருள் சூழ்ந்து விபத்து அபாயம் அதிகரிக்கிறது. பராமரிப்பு குறைபாடால், தடுப்பு சுவர்களையொட்டி புதர் செடிகள் வளர்ந்து, பாலம் பலவீனமடைகிறது.குறிப்பாக, பாலத்தின் வளைவில் தரையில் மண் மற்றும் சிறுகற்கள் படிந்து காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் திரும்பும் போது, பிடிமானம் இழந்து சறுக்கி, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாலத்தை முறையாக பராமரிக்கவும், மின்விளக்கு அமைக்கவும் நெடுஞ்சாலை துறை மற்றும் ஆச்சிபட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X