| 24 மணி நேரமும் 'சில்லிங்' விற்பனை Dinamalar
24 மணி நேரமும் 'சில்லிங்' விற்பனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:55

வால்பாறை:வால்பாறையில், 24 மணி நேரமும் 'சில்லிங்' மது விற்பனை செய்வதை கட்டுப்படுத்தாததால், 'குடிமகன்'கள் போதையிலேயே மிதக்கின்றனர்.வால்பாறை உட்கோட்டத்தில், காடம்பாறை, வால்பாறை, முடீஸ், ேஷக்கல்முடி ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதியில், சமீப காலமாக 'சில்லிங்' மது விற்பனை ஜோராக நடக்கிறது. ஆளுங்கட்சியினர் ஆதரவோடு 'சில்லிங்' விற்பனை நடப்பதால், தடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.வால்பாறை நகரில் உள்ள மதுபானக்கடையில், குவாட்டர் பாட்டில்களை பெட்டி பெட்டியாக வாங்கிச்சென்று, ஒவ்வொரு எஸ்டேட்டிலும், அதிக விலையில் 'சில்லிங்' விற்பனை செய்கின்றனர். குவாட்டர் மது பாட்டிலுக்கு, 10 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.வால்பாறை பகுதியில், 24 மணி நேரமும் 'சில்லிங்' விற்பனை கொடிகட்டி பறப்பதால், 'குடிமகன்'கள் எந்த நேரத்தில் சென்றாலும், விரும்பிய மது வகைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். வால்பாறை இன்ஸ்பெக்டர் முருகேசன் கூறுகையில், ''வால்பாறையில் 'சில்லிங்' விற்பனைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 'சில்லிங்' விற்பனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், டாஸ்மாக் கடைகளிலிருந்து சரக்கு விற்பனை செய்யப்படுகிறது.இனிமேல், சில்லிங் விற்பனை நடந்தாலோ, டாஸ்மாக் கடைகளில் இருந்து அதிக அளவிலான சரக்கு ஒருவருக்கு விற்கப்பட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X