குடியிருப்பு பகுதியில் புதர் அகற்ற தயக்கம்: காற்றில் பறக்குது வனத்துறை உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:55

வால்பாறை:தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள புதரை அகற்ற, எஸ்டேட் நிர்வாகங்கள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், சமீப காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்., 8ம் தேதி, நடுமலை எஸ்டேட் பகுதியில் வீட்டின் முன், விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தையை சிறுத்தை கவ்வி சென்று கொடூரமான முறையில் கொன்றது.அதே போல், சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டத்தில் பத்து வயது சிறுமி உட்பட மூன்று பேரை சிறுத்தை தாக்கியது. அதில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அதனை தொடர்ந்து காஞ்மலை எஸ்டேட் பகுதியில் வீட்டின் முன்பு துணி துவைத்துக் கொண்டிருந்த தொழிலாளியை சிறுத்தை கொன்றது. இந்த சம்பவங்களை தொடர்ந்து, எஸ்டேட் பகுதியில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள புதர்களை வெட்ட வேண்டும் என்று, எஸ்டேட் நிர்வாகத்திற்கு வனத்துறையினர் 'நோட்டீஸ்' அனுப்பினர்.இதையடுத்து பெரும்பாலான எஸ்டேட் நிர்வாகங்கள் புதர்களை உடனடியாக அகற்றினர். ஆனால் சில எஸ்டேட்களில் புதர்கள் இது வரை அகற்றப்படவில்லை.இதனால் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், குடியிருப்பிலுள்ள அவர்களின் குழந்தைகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது.வனத்துறை அதிகாரிகளின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு எஸ்டேட் அதிகாரிகள், புதர்களை அகற்றாமல் வேடிக்கை பார்ப்பதால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.சிறுத்தையால் அச்சம்வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை, அய்யர்பாடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், புதரில் மறைந்திருந்த சிறுத்தை கன்றுக்குட்டியை அடித்துக்கொன்றது.இந்தப்பகுதியில், புதர் வெட்டப்படாமல் இருப்பதால் சிறுத்தை நிரந்தரமாக தங்கியுள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் நடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X