| நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில் காய்கறி தோட்டம் அமைக்க முடிவு Dinamalar
நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில் காய்கறி தோட்டம் அமைக்க முடிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:56

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சி.டி.சி., மேடு நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில், தென்னை மரங்கள் நடவு செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காய்கறி தோட்டம் அமைக்க நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சி சி.டி.சி., மேடு பகுதியில், ஏற்கனவே இருந்த பிளாஸ்டிக் சேகரிப்பு மையம், நகராட்சி பொது நிதி, ஆறு லட்சம் ரூபாய் செலவில் புதிததாக புனரமைக்கப்பட்டு, நுண்ணுயிர் உரமாக்கல் மையமாக மாற்றம் செய்யப்பட்டது.இந்த மையத்தில் நிறுவப்பட்டுள்ள இயந்திரத்தை கொண்டு உரம் தயாரிக்கப்படுகிறது. நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில், குப்பை தரம் பிரிக்கப்பட்டு, உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.இந்நிலையில், வளாகத்தில் காய்கறி தோட்டம் மற்றும் பயன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர்.அதன் தொடர்ச்சியாக, சி.டி.சி., மேடு நுண்ணுயிர் உரமாக்கல் மைய வளாகத்தில், தென்னங்கன்றுகள் மற்றும் செம்பருத்தி செடிகள் நடவு செய்யும் பணி நேற்று துவங்கப்பட்டது.நகராட்சி கமிஷனர் கண்ணன், தென்னங்கன்றுகளை நடவு செய்தார். விழாவில், நகர் நல அலுவலர் மாணிக்கவேல் ராஜன், சுகாதாரப்பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'சி.டி.சி., மேடு பகுதியில் தயாரிக்கப்படும் உரத்தை, காய்கறி தோட்டம் அமைத்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு, விரைவில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X