| பெரிய நெகமம் ஜமாபந்தியில் 135 மனுக்கள் Dinamalar
பெரிய நெகமம் ஜமாபந்தியில் 135 மனுக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:56

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.பெரியநெகமம் உள்வட்டத்துக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி, பெரிய நெகமம், சந்திராபுரம், சின்னநெகமம், மூலனுார், கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, ஆ.நாகூர், கொல்லப்பட்டி, போலிகவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு நேற்று ஜமாபந்தி நடந்தது.பட்டா மாறுதல் - 11, நத்தம்பட்டா - 7, வீட்டுமனைப்பட்டா - 37, நில அளவை - 4, உட்பிரிவு - 2, முதியோர் உதவித்தொகை - 56, இதர மனுக்கள் - 18, என மொத்தம், 135 மனுக்கள் பெறப்பட்டன. எந்த மனு மீது உடனடித்தீர்வு எட்டப்படவில்லை.இன்றுடன் நிறைவு!கோலார்பட்டி உள்வட்டத்துக்கு உட்பட்ட சோளபாளையம், நாட்டுக்கல்பாளையம், நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், கோமங்கலம்புதுார், எஸ். மலையாண்டிப் பட்டணம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, கூளநாயக்கன்பட்டி, சிஞ்சுவாடி ஆகிய கிராமங்களுக்கு இன்று நடக்கிறது. கடந்த, 18ம் தேதி துவங்கிய ஜமாபந்தி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X