நீருக்காக அணையில் யானைகள் முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:58

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, நவமலை பகுதிகளில், காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் பழங்குடியினர் அச்சமடைந்து உள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, நவமலை, காடம்பாறை பகுதிகளில் வசிக்கும் காட்டு யானைகள், ஆண்டுதோறும் கோடை காலத்தில், ஆழியாறு அணைப்பகுதிக்கு தண்ணீர், உணவு தேடி வருவது வழக்கம்.ஒற்றை ஆண் காட்டு யானை மற்றும் மூன்று குட்டிகளுடன் கூடிய காட்டு யானைகள் கூட்டம், நடப்பாண்டு பிப்., மாதம் ஆழியாறு அணைப்பகுதிக்கு வந்து முகாமிட்டது.இந்நிலையில், ஒற்றை ஆண் காட்டு யானை, நவமலை பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கடந்த மாதம், ஏழு வயது சிறுமி மற்றும் 55 வயது முதியவரை தாக்கி கொன்றது. அதன்பின், டாப்சிலிப்பில் இருந்து இரண்டு கும்கி யானைகளை அழைத்து வந்து, காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டி வந்தனர்.காட்டு யானைகள் நடமாட்டம் குறைந்ததால், கடந்த வாரம் கும்கி யானைகளை, வனத்துறையினர் டாப்சிலிப் அழைத்துச் சென்றனர். இந்நிலையில், ஆழியாறு, நவமலை சுற்றுப்பகுதிகளில் காட்டு யானைகள் மீண்டும் சுற்றுகின்றன.இரண்டு நாட்களுக்கு முன், நவமலை மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை ஆண் யானையும், கூட்டமாக யானைகளும் வந்து சென்றன. அதேபோல், சின்னாறுபதி பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்கும் வந்து செல்கின்றன.ஆழியாறில், தனியார் தென்னந்தோப்பில், கருப்புசாமி, செல்லம்மாள் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டு கதவை உடைத்த யானை, அரிசியை சாப்பிட்டது.இதனால், மின்வாரிய குடியிருப்பு பகுதி மற்றும் நவமலை, ஆழியாறு பகுதி பழங்குடியினர் அச்சத்தில் உள்ளனர். உணவுக்காக குடியிருப்புகளைத்தேடி வரும் யானைகளுக்கும், அதனால் அச்சப்படும் மக்களுக்கும், பருவமழை பெய்து, வனம் செழிப்படைந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.வனத்துறையினர் கூறியதாவது:வனத்துறையில், 12 பேர் கொண்ட தனிப்படை அமைத்து, ஆழியாறு, நவமலை, சேத்துடை பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பட்டாசு வெடித்து யானைகள் அடர் வனத்தினுள் விரட்டப்படுகிறது.வனத்தினுள் நீராதாரங்கள் வறண்டு கிடக்கிறது, புற்கள், மரங்கள் காய்ந்து கிடப்பதால், யானைகள் நீராதாரங்களைத் தேடி வருகிறது.பருவமழை துவங்கி வனத்திலுள்ள, நீராதாரங்களில் நீர் மட்டம் அதிகரித்து, வனம் பசுமைக்கு திரும்பினால் மட்டுமே யானைகள் வனத்தினுள் செல்லும். அதுவரை, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.ஆழியாறு - வால்பாறை ரோட்டில் அவ்வப்போது, யானைகள் ரோட்டை கடந்து அணைப்பகுதிக்கு வருகிறது. சுற்றுலா பயணிகள் ஆர்வக்கோளாறில் யானைகளுடன் 'செல்பி' எடுத்து ஆபத்தில் சிக்க வேண்டாம். யானைகளை துரத்தி ஆபத்துடன் விளையாட வேண்டாம் என, எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X