| மின் கட்டண பாக்கி இணைப்புகள் துண்டிப்பு Dinamalar
மின் கட்டண பாக்கி இணைப்புகள் துண்டிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
02:07

பாகூர்:தவளக்குப்பம் பகுதியில் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின், மின் இணைப்புகள் நேற்று அதிரடியாக துண்டிக்கப் பட்டது.


புதுச்சேரியில் மின் நுகர்வோர்கள், பல கோடி ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளனர். இதனை வசூலிக்க, மின் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, தவளக்குப்பம் பகுதியில் மின் கட்டண நிலுவை வைத்திருப்போர் பட்டியல் தயாரித்து, அவர்களின் மின் இணைப்பை துண்டிக்க ஒப்புதல் பெறப்பட்டது.இதனையடுத்து, தவளக்குப்பம் மின்துறை அலுவலக இளநிலை பொறியாளர் அன்பழகன் தலைமையிலான ஊழியர்கள் அபிேஷகப்பாக்கம், தவளக்குப்பம் பகுதியில் 2,000 ரூபாய்க்கு அதிகமாக கட்டண பாக்கி வைத்துள்ள நுகர்வோரின், மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது பலர், கட்டண பாக்கியை செலுத்தி, அதற்கான ரசீதை காண்பித்து மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தவிர்த்து கொண்டனர். சில இடங்களில் இணைப்பை துண்டிக்க நுகர்வோர்கள் எதிர்ப்பு தெரிவித்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X