| தம்பி வெட்டி கொலை அண்ணன் வெறிச்செயல் Dinamalar
தம்பி வெட்டி கொலை அண்ணன் வெறிச்செயல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
02:12

மேட்டுப்பாளையம்:காதல் பிரச்னையில் தம்பியை கொடூரமாக வெட்டி கொலை செய்த அண்ணன் தலைமறைவானார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்புசாமியின் மகன்கள் வினோத், 24, கனகராஜ், 22, கிழங்கு மண்டியில் கலாசு தொழிலாளிகள். வெள்ளிப்பாளையம் ரோட்டில் குடியிருக்கும், 17 வயது பெண்ணை கனகராஜ் காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், தம்பியின் காதலுக்கு அண்ணன் வினோத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்,கனகராஜ் வீட்டுக்கு காதலி வந்துள்ளார். இதனால்,அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கோபித்துக்கொண்டு கனகராஜ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எம்.ஆர்.டி., நகரில் தனியாக வீடு எடுத்து குடியேறினார். இத்தகவல் தெரிந்ததும், நேற்று மாலை தம்பி வீட்டுக்கு சென்ற வினோத், கனகராஜூவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது, கனகராஜை, அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.சண்டையை தடுக்க சென்ற காதலிக்கும்காயம் ஏற்பட்டது. இவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை எஸ்.பி., சுஜித்குமார், சம்பவஇடத்தை பார்வையிட்டார். மேட்டுப்பாளையம்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையில் போலீசார் வினோத்தை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X