கிரிவலப் பாதையை சீரமைக்க வேண்டும் வனத்துறை அனுமதிக்க பக்தர்கள் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
02:14

மேட்டுப்பாளையம்:ஓதிமலையை சுற்றியும் கிரிவலப்பாதையில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற, பெத்திக்குட்டை பொது மக்கள் ஜமாபந்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறுமுகையை அடுத்த பெத்திக்குட்டை ஓதிமலையில், முருகன் கோவில் உள்ளது. ஓதிமலையை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும், மலையை சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். காலப்போக்கில் கிரிவலப்பாதையில் முட் செடிகள், மரங்கள் புதர்போல் வளர்ந்துள்ளன. இவற்றை வெட்டி அகற்ற மக்கள் இறங்கிய போது, சிறுமுகை வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, கிரிவலப்பாதையை சுத்தம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் அல்லது, வனத்துறையே பாதையை சுத்தம் செய்து தர வேண்டும் என்று பக்தர்களும், ஊர் மக்களும், மேட்டுப்பாளையத்தில் நடந்த ஜமாபந்தியில், ஆர்.டி.ஓ., டெய்சிகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆர்.டி.ஓ., பரிசீலிப்பதாக கூறினார்.இது குறித்து, , பா.ஜ., மாவட்ட செயலாளர் சக்திவேல் கூறியதாவது: ஓதிமலையை சுற்றியும் கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்கள் கிரிவலம் வந்து, தமிழ்க்கடவுளான முருகனை வழிபடுகின்றனர். இக்கிரிவலப்பாதை வருவாய்த்துறைக்கு சொந்தமான இடமாகும். காலப்போக்கில் இந்த இடத்தில் சமூக காடு வளர்ப்பு திட்டத்தில் மரங்கள் வளர்க்க, சிறுமுகை வனத்துறை முன் வந்தனர். அங்கு மரங்கள் ஏதும் வளராத நிலையில் முட்புதர்கள் வளர்ந்து பாதையை மறைத்துக் கொண்டது. இதனால் கிரிவலம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.மேலும், முட் செடிகளை ஊர் பொது மக்கள் வெட்டி அகற்றிவிட்டு, கிரிவலம் செல்ல மக்கள் முடிவு செய்தனர். அதற்காக முட்செடிகளை வெட்ட முயற்சி செய்த போது, சிறுமுகை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.அதனால் முட்புதர்களை அகற்ற அனுமதி வழங்க வேண்டுமென, கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X