| கோவனூரில் வாழை, தென்னை சேதம்: காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் Dinamalar
கோவனூரில் வாழை, தென்னை சேதம்: காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
02:15

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனுாரில் காட்டு யானைகளால் வாழை, தென்னை மரங்கள் சேதமானது.கோவை புறநகர் பகுதியில், காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. மலையோர கிராமங்களை முற்றுகையிடும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல திட்டங்களை வகுத்தாலும், அவை முழுமையான பலனை தரவில்லை. கடந்த சில மாதங்களாக, ஓய்ந்திருந்த யானைத் தொல்லை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விட்டது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், தேவையம்பாளையம், கோவனுார் உள்ளிட்ட மலையோர கிராமங்களிலுள்ள விவசாய விளை நிலங்களில் நுழைந்து, காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.நேற்று கோவனுார் மலை அடிவாரத்தில், பாலமலை செக் போஸ்ட் ஒட்டிய பகுதியிலிருந்து புறப்பட்ட இரண்டு யானைகள், அங்குள்ள ராதா என்பவரது தோட்டத்தில் புகுந்து, வாழை தென்னை மரங்களை கீழே தள்ளி சாய்த்தது. பட்டாசு வெடித்து, யானைகளை விரட்டும் பணியில், விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறுகையில்,'யானைகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை விவசாயிகள் துன்பம் தீராது. இதே நிலை நீடித்தால், கோவை வடக்கு வட்டத்தில் முற்றிலும் விவசாயம் அழிந்து போகும,' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,' யானைகளின் வரவை தடுக்க, வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், யானைகள் மலையில் இருந்து கீழே இறங்கும் பகுதியிலேயே, தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X