அன்னூர்:அன்னூர், கேஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா நடந்ததுபுலவர் சிவசண்முகம் தலைமை வகித்து, ' தமிழ் இலக்கியத்தில் அறநெறி' என்னும் தலைப்பில் பேசுகையில், "வாழ்வில் அறநெறியோடு வாழ்வது எப்படி, சமுதாயத்தில் அறநெறியை பின்பற்றுவது எப்படி, என்பது தமிழ் இலக்கியங்களில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவு அறநெறி குறித்து தமிழில் அதிக அளவில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அற நெறியை பின்பற்றினால் வாழ்வில் பிரச்சனையும் ஏற்படாது" என்றார்.பள்ளி தாளாளர் சாந்தாமணி ராமசாமி, பெற்றோர், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.