கோவை-திருச்சி சாலை விரிவாக்கப்பணி தட்டிக்கழிப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
02:16

சூலுார்:கோவை- திருச்சி சாலையிலுள்ள சூலுாரில் விரிவாக்கப் பணிகளில், வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் அளவீடு பணிகளில் பாரபட்சம் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.நாகப்பட்டினம் முதல் கூடலுார் வரை, சூலுார் வழியாக தேசிய நெடுஞ்சாலையான (என்.எச்.,81) திருச்சி சாலை செல்கிறது. இச்சாலையின் பல இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், சூலுார் வட்டத்துக்குட்பட்ட காங்கயம்பாளையம் முதல் சிந்தாமணிப்புதுார் வரை விரிவாக்கம் செய்யப்படவில்லை.ஆபத்தான வளைவுகள், குறுகிய பாலங்கள் மற்றும் அகலமில்லாத சாலைகளால் தினசரி விபத்துகள் நடப்பதும், உயிரிழப்புகள் தொடர்வதும் வாடிக்கையாக மாறின. விபத்தில் சிக்கி உடலுறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன.இதனால், ஆவேசமடைந்த சூலுார் மக்கள், சாலை விரிவாக்கத்தை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக, சாலை விரிவாக்க பணிக்கு, மத்திய அரசு, ரூ. 30 கோடி நிதி ஒதுக்கியது. இரு கட்டமாக விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.முதற்கட்டமாக பாப்பம்பட்டி பிரிவு முதல், காங்கயம்பாளையம் வரை பணிகள் துவங்கியுள்ளன. ஆனால், மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், அளவீடு செய்யாமலும் பணிகள் நடந்தன. ஆவேசமடைந்த மக்கள் மற்றும் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர், அமைச்சர், எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் மனு அளித்தனர்.என்னதான் மனுக்களை கொடுத்தாலும், அரசு அதிகாரிகள் விரிவாக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதே சமயம் விபத்து நடைபெறும் பகுதிகளில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.பொதுமக்கள் மனு அளிக்கும் போது, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், அளவீடு செய்து தரக்கோரி மனு அளிக்கவில்லை என, வருவாய்த்துறையினர் கூறியுள்ளனர். லோக்சபா தேர்தலுக்கு முன்பே, அளவீடு செய்து தர ஏராளமானோர் மனு அளித்தனர்.ஆனால் லோக்சபா மற்றும் சூலுார் இடைத்தேர்தல் முடிந்த பின், அளவீடு செய்வதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மக்களின் தொடர் நெருக்குதல் காரணமாக, ஒரு வழியாக நேற்று முன்தினம் வருவாய்த்துறை, நில அளவை பிரிவினர் அளவீடு செய்யும் பணியை துவக்கினர்.தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர். கலங்கல் சாலை முதல் சூலுார் அரசு மருத்துவமனை வரை அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நேற்று அளவீடு செய்ய வருவாய்த்துறையினர் வரவில்லை. இதனால், என்.எச்., அலுவலர்கள் வெறுத்துபோயினர்.அதேபோல், சாலையின் பக்கவாட்டில் உள்ள மின் கம்பங்களை அகற்ற, மின் வாரியத்துக்கு, செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமல், தாங்களே அப்பணியை செய்து கொள்வதாக ஒப்பந்ததாரர் தரப்பில் கூறியதால், அப்பணியும் முடங்கி கிடக்கின்றன.இதுகுறித்து சூலுார் மக்கள் கூறுகையில்,'ரோட்டின் இருபக்கமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன என்பது கண்கூடாக தெரிகிறது.ஆனால், அளவீடு செய்து தர, வருவாய்த்துறையினர் தயங்குவது எதனால் என்பது தெரியவில்லை. 1936 ஆண்டு ஆவணங்களின் படி, அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X