| ஆய்வு கூட்டத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் Dinamalar
ஆய்வு கூட்டத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
02:44

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த அனைத்து துறை ஆய்வு கூட்டத்தில், அமைச்சர்களுடன், ஆளுங்கட்சி பிரமுகர்களும் பங்கேற்றதால், அதிகாரிகள் அதிருப்தியடைந்தனர்.



திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை, அனைத்து துறை ஆய்வு கூட்டம், கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.மாவட்ட, ஒன்றிய அளவிலான அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது துறையில் இதுவரை நடந்த திட்டப்பணிகள் குறித்து விவரித்தனர். நிறைவேற்றப்படாத பணிகள் நிலை குறித்து அமைச்சர்கள், விளக்கம் கேட்டனர்.



துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்தில், ஏராளமான ஆளுங்கட்சி கட்சி பிரமுகர்களும், பங்கேற்றனர். இதனால், கூட்டம் நடந்த அறையில், கடும் நெரிசல் ஏற்பட்டது. மேலும், அரசு அதிகாரிகள் அதிருப்தியடைந்தனர்.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆப்சென்ட்நேற்று நடந்த அனைத்து துறை ஆய்வு கூட்டத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.



தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன் (திருவள்ளூர்), கிருஷ்ணசாமி (பூந்தமல்லி) ஆகியோர் பங்கேற்கவில்லை. மேலும், பார்லிமென்ட் கூட்டம் நடப்பதால், எம்.பி., ஜெயகுமார் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X