| ஆங்கில ஆசிரியர் இடம் மாற்றம் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு Dinamalar
ஆங்கில ஆசிரியர் இடம் மாற்றம் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
02:48

கும்மிடிப்பூண்டி : இடம் மாற்றம் செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியரை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று, பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கும்மிடிப்பூண்டி அருகே, நத்தம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 83 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில், மூன்று ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியராக, பாபு என்பவர், பணியாற்றி வந்தார்.சில தினங்களுக்கு முன், அந்த ஆசிரியர், புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு மாற்றப்பட்டார்.



பேச்சு ஆங்கிலம், பொது அறிவு, தனித்திறன் என, பாடம் கடந்து, பல வகையான பயிற்சிகளை வழங்கி, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நன் மதிப்பை பெற்றிருந்தார் என, கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.இடம் மாற்றத்தை ஏற்க மறுத்த பெற்றோரும், மாணவர்களும், மீண்டும் அந்த ஆசிரியரை, நத்தம் பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் என, உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் தெரிவித்தனர். அதில், நடைமுறை சிக்கல் இருப்பதாக தெரிக்கப்பட்டது.மீண்டும் அந்த ஆசிரியரை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று, பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டனர்.



பள்ளி நுழைவாயல் முன், சாலையோரமாக மாணவர்கள் அமர்ந்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கிராம மக்களும், பெற்றோரும், போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தனர்.தகவல் அறிந்து சென்ற மாவட்ட கல்வி அலுவலர், ரவி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் அதே பள்ளியில் அந்த ஆசிரியரை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். அதை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X