| கால்நடை மருத்துவமனை விவசாயிகள் சிரமம் Dinamalar
கால்நடை மருத்துவமனை விவசாயிகள் சிரமம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
03:01

திருத்தணி : கால்நடை மருத்துவமனை செல்வதற்கு, போதிய சாலை வசதி ஏற்படுத்தாததால், விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.



திருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சியில், கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு, மத்துார், சிங்கராஜபுரம், அலுமேலுமங்காபுரம் மற்றும் கொத்துார் ஆகிய கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கால்நடைகளை சிகிச்சை அளிப்பதற்கு ஓட்டி வருகின்றனர்.இந்நிலையில், கால்நடை மருந்தகத்திற்கு, திருத்தணி - மத்துார் செல்லும், மாநில நெடுஞ்சாலையில் இருந்து, 700 மீட்டர் துாரத்திற்கு, சாலை வசதி ஏற்படுத்தவில்லை.



தற்போது, வயல்வெளியில், கால்நடைகளை சிகிச்சைக்கு ஓட்டிச் செல்கின்றனர். சாலை வசதியில்லாததால், மழை பெய்யும் போது சேறும், சகதியுடன், கால்நடைகளை ஓட்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, ஒன்றிய நிர்வாகம் கால்நடை மருத்துவமனைக்கு, சாலை வசதி ஏற்படுத்தி, தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X