| செம்பட்டி பஸ் ஸ்டாண்டை ஒழுங்குபடுத்தலாமே Dinamalar
செம்பட்டி பஸ் ஸ்டாண்டை ஒழுங்குபடுத்தலாமே
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2019
00:25

செம்பட்டி : செம்பட்டி நகரானது முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரோடுகளின் சந்திப்பு பகுதியாக இருப்பதால், இங்கு எந்தநேரமும் கணிசமான அளவில் பயணிகளின் வருகை உள்ளது.ஆனால் பெயரளவில் மட்டுமே போலீசாரின் கண்காணிப்பு இருக்கிறது. இதனால் பெண்கள், மாணவர்களை பாதிக்கும் பிரச்னைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.மாணவியர், பெண்களை கேலி செய்வோர் நடமாட்டம் அதிகம். பயணிகளின் நிழற்கூடத்தில், மதுபிரியர்களின் அட்டகாசத்தால் பெண்கள் முகம் சுளிக்கின்றனர்.மெயின்ரோடு வரை நீட்டிக் கொண்டிருக்கும் கடைகளின் ஆக்கிரமிப்புகளால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிக்கிறது. செம்பட்டி ரவுண்டானாவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் பணியில் இருப்பதில்லை.வி.ஐ.பி.,க்கள் வருகை, வாகன வழக்குப்பதிவு சோதனையின்போது மட்டுமே நிற்கின்றனர். ஆட்டோக்களில் அனுமதி பெறாதவை, உரிய பயிற்சி, லைசென்ஸ் இல்லாத நபர்களால் இயக்கப்படுவது என விதிமீறல்கள் தாராளமாக உள்ளது. தனியார் ஆட்டோக்கள் மட்டுமின்றி பள்ளி வாகனங்களிலும் மாணவர்களை திணித்துக் கொண்டு பயணிக்கின்றனர். எனவே போலீசார் செம்பட்டி பஸ்ஸ்டாண்ட் மீது ஒரு கண் வைத்தால் பல குறைகளை சரிசெய்யலாம்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X