நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2019
05:59

மயிலாப்பூர்:மயிலாப்பூரில், நடைபாதையை ஆக்கிரமித்திருந்த, 30 சாலையோர கடைகள் அகற்றப்பட்டன.



மயிலாப்பூரில், லஸ் சர்ச் சாலையில் நாகேஸ்வரா பூங்கா அருகே, நடைபாதையை ஆக்கிரமித்து, சாலையோரங்களில் உணவு கடைகள், இளநீர் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது குறித்து, நம் நாளிதழில், 'சாலையோர கடைகளால் நடைபாதை ஆக்கிரமிப்பு' என்ற தலைப்பில், நேற்று செய்தி வெளியானது.




இதன் எதிரொலியாக, மயிலாப்பூர் போலீசாரின் பாதுகாப்புடன், நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த, 30 கடைகளையும், மாநகராட்சியினர் அகற்றினர்.மயிலாப்பூர், 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' மாடியில், கட்டட வேலை நடைபெறுகிறது. கட்டட கழிவுகளை, நடைபாதையில், அந்த கட்டடத்தில் வேலை செய்யும், ஒப்பந்ததாரர் கொட்டியிருந்தார்.




மாநகராட்சியினர், இரண்டு நாட்களுக்கு முன், எச்சரிக்கை செய்த நிலையிலும், அந்த கழிவுகள் அள்ளப்படவில்லை.இதனால், அந்த கழிவுகளை மாநகராட்சியினர், சிறிய, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அள்ளி, வங்கி வாசலில் கொட்டினர். இதனால், ஒப்பந்ததாரருக்கும், மாநகராட்சியினருக்கும் தகராறு ஏற்பட்டது. பாதுகாப்பிற்கு வந்த போலீசார், ஒப்பந்ததாரரை, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhura - chennai,இந்தியா
10-ஜூலை-201920:02:52 IST Report Abuse
vidhura சாந்தோம் - மந்தவெளி மார்க்கெட் சாலை .....ஒரு காலத்தில் பேருந்து வழித்தடம் ....இன்று இரு சக்கரம் வண்டிகள் கூட போக திணறும் நிலையில் உள்ளது .. 6 பள்ளிக்கூடங்கள் உள்ள இந்த தடத்தில் ...சாலை இரு புறமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வண்டிகள் மற்றும் நடை பாதை ஆக்கிரமிப்புகள் ...நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் , முதியோர்கள் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானது .மாநகராட்சி மற்றும் டிராபிக் போலீஸ் இணைந்து இந்த நிலைமையை மாற்ற வேண்டும்... சாந்தோம் வழியாக மந்தவெளி , அபிராமபுரம் பேருந்து தடம் மிகவும் அவசியம் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X