* நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க முடிவு* வைகை அணையில் நீர்மட்டம் சரிவு எதிரொலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
01:38

மதுரை:வைகை அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் மதுரை மாநகராட்சியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.




நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க நாள் ஒன்றுக்கு 224 எம்.எல்.டி., (ஒரு எம்.எல்.டி., என்பது நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் லிட்டர் என்று அர்த்தம்) தேவை. ஆனால் வைகை, காவிரி மற்றும் உள்ளூர் போர்வெல்களில் இருந்து 170 எம்.எல்.டி., பெறப்பட்டது. மழை பொய்ப்பதால் தற்போது 135 எம்.எல்.டி., மட்டுமே கிடைக்கிறது. இதனால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிப்பதாக மாநகராட்சி தெரிவித்தது.





ஆனால் பல வார்டுகளில் நான்கு நாட்களுக்குஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்

பட்டது.இதற்கிடையில் வைகை அணைக்கு நீர்வரத்து நின்று விட்டது. குடிநீருக்காக தினமும் 6 மில்லியன் கனஅடி திறக்கப்படுகிறது. ஒரு மில்லியன் கனஅடி வரை ஆவியாகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.




நேற்று காலை நிலவரப்படி 28.14 அடியாக சரிந்தது. 301 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. 20 முதல் 22 அடி வரை அணையில் மண் மேவியுள்ளதால் 6 முதல் 8 அடி தண்ணீர் எடுக்க முடியும். இதன் மூலம் 35 நாட்களுக்கே குடிநீர் கிடைக்கும். ஒரு வேளை மழை பெய்யா விடில் அதன்பின் மாநகராட்சிக்கு குடிநீர் பெற முடியாது.இதை கருத்தில் கொண்டு குடிநீர் விநியோக இடைவெளியை அதிகரிக்க திட்டமிட்ட மாநகராட்சி, 'ஜூலை 17 முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். புகார்களை 0452-252 5252 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம்' என அறிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan k - madurai,இந்தியா
15-ஜூலை-201917:57:07 IST Report Abuse
kumaresan k மதுரைல அதுவும் நகர் புறத்தில் மழை பெய்வதில்லை . இதற்கு என்ன காரணம் தெரியுமா ? மதுரை நகரை சுற்றி கனமான அடர்த்தியான மேகங்கள் உருவாவதில்லை . அடர்த்தியான மேகங்கள் உருவானால் தான் மழை பெய்யும் . அடர்த்தியான மேகங்கள் உருவாவதற்கு அடர்த்தியான காடுகள் செழிப்பான மரங்கள் இருப்பது மிகவும் அவசியம் . மதுரை நகரின் உள்ளும் புறமும் காடுகள் செழிப்பான மரங்கள் பல வருடங்களாக அழிக்க பட் டு வருகின்றன . தற்போது சுத்தமாக அழிக்கப்பட்டுவிட்டது . மீண்டும் காடுகளை உருவாக்கினால் மட்டுமே மழை பெய்யும் . இதை மதுரை மக்கள் மற்றும் மதுரை மாநகராட்சி உணர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
15-ஜூலை-201908:28:55 IST Report Abuse
Ganapathy மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கேரளாவிலும் மழை சரியாக பொழியவில்லை . இதன் காரணமாக அங்கு உள்ள அணைகளின் தண்ணீர் குறைந்துவிட்டது . மின்சார தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை அங்கு உள்ளது . முல்லை பெரியரில் இருந்தது வரும் தண்ணீர் வைகைக்கு கிடப்பது குறையும் . இனி வான் மழையை நம்பித்தான் உள்ளது தமிழகம் குறிப்பாக தென் தமிழகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X