| ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கடலூரில் கத்தி வெட்டு Dinamalar
ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கடலூரில் கத்தி வெட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
00:13

கடலுார்:தொழில் போட்டி காரணமாக, ஆம்புலன்ஸ் டிரைவரை கத்தியால் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் ,மஞ்சக்குப்பம் புரு ேஷாத்தமன் நகரசை் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் பிரபு,29: மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். ஆம்புலன்ஸ் டிரைவர்களான இருவரும், கடலுார் அரசு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் வேன் ஓட்டி தொழில் செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு கடலுார் அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளியை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அழைத்து செல்வதில், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் இளஞ்செழியன் செல்ல முடியாததால் , நோயாளியை பிரபு அழைத்து சென்றுள்ளார். இந்த பிரச்னை காரணமாக நேற்று மாலை, இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இளஞ்செழின் கத்தியால் பிரபுவின் கையில் வெட்டினார். படுகாயமடைந்த பிரபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த மோதல் சம்பவம் குறித்து கடலுார் புதுநகர் போலீசார், இருவரிடமும் விசாரணை செய்து வருகின்னர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X