| கண்ட்ரோல் ரூமிற்கு எஸ்.ஐ., மாற்றம் Dinamalar
கண்ட்ரோல் ரூமிற்கு எஸ்.ஐ., மாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
00:14

கடலுார்:மோசடி செய்த நபர் குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்காத, விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் கண்ட்ரோல் ரூமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.விருத்தாசலம் சட்டம் - ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ். நேற்று முன்தினம் ஸ்டேஷன் பொறுப்பில் இருந்தபோது, விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த அசோக்குமார், 45; என்பவரை கார் உரிமையாளரான வேலுார், அரக்கோணத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர், தனது காரை வாடகைக்கு பெற்றுச் சென்று மோசடி செய்து விட்டதாக கூறி, பிடித்து வந்து ஒப்படைத்தார்.


இது தொடர்பாக அசோக்குமார் மற்றும் ஹரிகிருஷ்ணனிடம், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை செய்தார். அப்போது, மேலும் சில வழக்குகளை விசாரித்த அவர், கார் திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையில் கவனம் செலுத்தாமல் தாமதப்படுத்தினார். மேலும், மாலை 6:00 மணிக்கு மேல் விசாரணையில் உள்ள நபர்கள் குறித்து எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.ஆனால், கார் மோசடி செய்த அசோக்குமாரிடம் விசாரணை செய்தது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து விசாரணை செய்த எஸ்.பி., அபிநவ், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை, கடலுார் கண்ட்ரோல் ரூமிற்கு இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X