| பல்கலைக்கு இலவச பஸ் சேவை முதல்வரிடம் கோரிக்கை மனு Dinamalar
பல்கலைக்கு இலவச பஸ் சேவை முதல்வரிடம் கோரிக்கை மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
03:00

புதுச்சேரி:புதுச்சேரி பகுதிகளில் இருந்து மாணவ மாணவியர் பல்கலைக்கழகம் செல்வதற்கு வசதியாக, இலவச பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என, அரசிடம், பல்கலை., சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழக ஆய்வுகள், கல்வி கண்டுபிடிப்பு மற்றும் கிராமப்புற புனரமைப்பு இயக்குனர் பாலகிருஷ்ணன், பதிவாளர் சித்ரா ஆகியோர், முதல்வர் நாராயணசாமியை, சட்டசபை அலுவலகத்தில் நேற்று சந்தித்து மனு அளித்தனர். .மனுவில், 'கடந்த 10 ஆண்டுகளில், புதிய துறைகள் மற்றும் பல்வேறு துறைகளில் 25 சதவீத இடங்களை ஒதுக்கியதன் காரணமாக, புதுச்சேரி மாணவர்களின் சேர்க்கை பல்கலைக்கழகத்தில் அதிகரித்துள்ளது.கடந்த 12 ஆண்டுகளாக தவளக்குப்பம், அரியாங்குப்பம் வில்லியனூர், லாஸ்பேட், ஜிப்மர் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து இலவச பஸ் சேவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு குறைந்தபட்சம் 10 இலவச பஸ் சேவையை வழங்க வேண்டும்.புதுச்சேரி பல்கலைக்கழகம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், இலவச போக்குவரத்து சேவையை அரசு செய்து கொடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X