| சாலைகளை அகலப்படுத்த வேண்டும்: வைத்திலிங்கம் எம்.பி., கன்னி பேச்சு Dinamalar
சாலைகளை அகலப்படுத்த வேண்டும்: வைத்திலிங்கம் எம்.பி., கன்னி பேச்சு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
03:02

புதுச்சேரி:கடலூர்-புதுச்சேரி சாலையை, உடனடியாக நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும் என, லோக்சபாவில் வைத்திலிங்கம் எம்.பி., பேசினார்.போக்குவரத்து மானிய கோரிக்கையின் மீது, லோக்சபாவில், வைத்திலிங்கம் எம்.பி., பேசியதாவது;புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது.


புதுச்சேரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்.எச். 66, என்.எச்., 32, இ.சி.ஆர்., ஆகியவை கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகின்றன. நான்கு பெரிய சாலை சந்திப்புகள் மேம்பாலத்திற்காக ஆய்வு செய்யப்பட்டன.புதுச்சேரி அரசு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கியமான சாலை சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க உத்தேசித்துள்ளது. இந்த நான்கு சந்திப்புகளுக்கும் ஏறக்குறைய 200 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்யப்பட்டு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது.மேற்கண்ட திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்குமாறு சாலை போக்குவரத்து அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.


தற்போது இரண்டு வழிச்சாலையாக இருக்கும் என்.எச் -32 விழுப்புரம்--புதுச்சேரி, -கடலூர்-புதுச்சேரி சாலையை, உடனடியாக நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட வேண்டும்.புதுச்சேரி - கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு இணையான சாலையை அமைப்பதற்க்கான சாத்தியத்தை ஆராய்வதற்கு அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இந்த புதிய சாலையை உருவாக்குவதன் மூலம் பயண நேரத்தை குறைக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X