| பார்த்தீனியம் செடிகள் ஆக்கிரமிப்பு அகற்றினால் பாதிப்பில்லை Dinamalar
பார்த்தீனியம் செடிகள் ஆக்கிரமிப்பு அகற்றினால் பாதிப்பில்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
05:01

கோத்தகிரி:'கோத்தகிரி அரவேனு கேத்தரின் -'வாட்டர் பால்ஸ்' காட்சிமுனை சாலையில் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கோத்தகிரி அரவேனு அருகே, கேத்தரின் வாட்டர் பால்ஸ் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் கேத்தரின் நீர் வீழ்ச்சி காட்சி முனைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தவிர, 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. இதனால், இச்சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அரவேனு முதல் கேத்தரின் வாட்டர் பால்ஸ் வரை, மூன்று கி.மீ., தொலைவில் சாலையின் இரு புறங்களிலும் விஷதன்மை கொண்ட பார்த்தீனியம் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. நீண்ட நாட்கள் இச்செடிகள் அகற்றப்படாததால் புதர் போல காட்சியளிக்கின்றன. இதனால், இவ்வழியாக செல்லும் மக்களுக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X