'இமேஜ்' உயருது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
05:17

அரசு பள்ளி மீதான அவநம்பிக்கை தகர்ப்புபெற்றோர், ஆசிரியர் முயற்சிக்கு பலன்'கவர்ன்மென்ட் ஸ்கூலா, பசங்கல அங்க சேர்க்காதீங்க. கோச்சிங் சரியிருக்காது, டீச்சர்ஸ் கேர் பண்ணிக்க மாட்டாங்க,' இது தான், அரசுப் பள்ளிகள் மீதான மக்களின் அபிப்ராயமாக உள்ளது.இப்படியான சூழலில், மக்களின் எண்ணத்தை தகர்க்கும் வகையில் சிறப்பாக செயல்படுகிறது, பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் உருது அரசு துவக்கப்பள்ளி.'அந்த பள்ளியில அப்படி என்ன சிறப்புனு' யோசிக்கற உங்க மைன்ட் வாய்ஸ் புரியுது. இந்த கட்டுரையை முழுசா படிங்க உங்களுக்கே புரியும்.திருக்குறள், நாளிதழ் முக்கிய செய்திகள், பழமொழி வாசித்தும், பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் பரிமாற்றத்துடன், பள்ளியின் காலை வழிபாடு துவங்குகிறது.பள்ளி சுவர்கள் அனைத்திலும், பல்வேறு சித்திரங்கள் பேசுகின்றன. மாணர்கள் அமர்வதற்கு குட்டி குட்டியாய் வட்ட மேஜைகள் போடப்பட்டுள்ளன.'எல்லோரும் 'ஹோம் ஒர்க்' பண்ணீட்டிங்களா, டைரில அப்பா, அம்மா கையெழுத்து வாங்கீட்டிங்களா' என, டீச்சர் கேட்டதும், வீட்டுப்பாடங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கின்றனர்.ஒவ்வொரு மாணவனின் கல்வித்திறனை அளவிட்டு, படிப்பில் பின்தங்கியுள்ளவர்களை கண்டறிந்து, ஒவ்வொருவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பிக்கின்றனர் ஆசிரியர்கள்.இதற்காக, ஆசிரியர்கள் சொந்த செலவில் 'டைரி' வாங்கிக் கொடுத்து, பள்ளியில் தினமும் நடக்கும் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களின் செயல்திறன் குறித்தும் அதில் எழுதி அனுப்புகின்றனர். தனியார் பள்ளிகளைப்போன்று, மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோருக்கு தெரியப்படுத்துகின்றனர்.பாடத்தை, 'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் கற்றுக்கொடுக்கின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள பாடத்திட்டங்கள், 90 சதவீதம் ஒலி, ஒளி வடிவில், 'கார்டூன்', பாடல்கள், 'அனிமேஷன்' காட்சிகளாக மாணவர்கள் படிக்கின்றனர்.இதனால், மிகவும் எளிதாக பாடங்களை புரிந்து கொள்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, 'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் பாடல்களாக கற்பிக்கின்றனர்.மதிய உணவு நேரத்தில், ஒற்றுமையாக ஒருவர் பின் ஒருவராக வந்து, சத்துணவு திட்டத்தில் வழங்கும் உணவை சாப்பிடுகின்றனர். 80 சதவீதம் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். மாணவர்களின் சத்துக்குறைபாட்டை போக்க, ஆசிரியர்கள் சொந்த செலவில், கடலை, பயறுவகைகள், சத்துமாவு வழங்குகின்றனர்.விளையாட்டுதினமும், மாலையில் ஒரு மணி நேரம், மாணவர்களை விளையாட வைக்கின்றனர். தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து கால்பந்து, கைப்பந்து, த்ரோபால் போன்றவை பெற்றுள்ளனர்.தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இந்த பள்ளி செயல்படுவதால், ஆண்டுதோறும் சேர்க்கை அதிகரித்து வருகிறது.சேர்க்கை அதிகரிப்புகடந்த, 2013ல் இப்பள்ளியில், 90 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். சேர்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து நடப்பாண்டு, 260 மாணவர்கள் படிக்கிறார்கள். நடப்பாண்டில், பல மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து வந்துள்ளனர்.அனைத்து அரசுப்பள்ளிகளும் இதேபோல் செயல்பட்டால், மாணவர்களின் வாழ்வு வளமாவதுடன், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து பள்ளிகள் பூட்டப்படும் நிலை மாறும். அரசு பள்ளிகள் மீதான 'இமேஜ்' உயரும்.இது, ஒரு கூட்டு முயற்சியே!''2013ல் இருந்து இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறேன். மாணவர்களின் மீது ஆசிரியர்கள் கொண்ட அன்பால், சிறந்த முறையில் பாடம் கற்பிக்கின்றனர். ஆசிரியர்களின் கடின உழைப்பு, பெற்றோர் ஒத்துழைப்பு காரணமாக சேர்க்கை அதிகரித்துள்ளளது. பள்ளியில், 15 பேர் மட்டுமே தமிழ் வழியில் படிக்கின்றனர். மற்ற மாணவர்கள் அனைவரும் ஆங்கில வழியில் பயில்கின்றனர். சேர்க்கை அதிகரிப்புக்கு ஆங்கில வழிக்கல்வி முறையும் முக்கிய காரணம்.''கலாவதி, பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களின் நற்பண்பு!''மாணவர்கள் ஒவ்வொருவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பிக்கிறோம். அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்படுகிறது. 'ஸ்போக்கன் இங்கிலீஸ்' வகுப்பு, செயல்வழிக்கற்றல் முறை, 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைப்பு என பலமுறைகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. மாணவர்களின் செயல்திறன் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் அணுகுமுறை, மாணவர்களிடையே ஏற்படும் நற்குணங்களை பார்த்து, இப்பள்ளியில் ஆர்வத்துடன் சேர்க்கின்றனர்.''பவித்ராதேவி, ஆசிரியர்

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X