எஸ்டேட்களில்அடிப்படை வசதியில்லை! நகராட்சிக்கு தொழிலாளர்கள் கோரிக்கை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
எஸ்டேட்களில்அடிப்படை வசதியில்லை! நகராட்சிக்கு தொழிலாளர்கள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
05:18

வால்பாறை:எஸ்டேட் பகுதியில் அடிப்படை வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு எஸ்டேட்களில் பணிபுரிந்து வருகின்றனர்.எஸ்டேட் ரோடுகள் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளன. பெரும்பாலான வழித்தடங்களில் பஸ்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.மேலும், எஸ்டேட் பகுதியில் நடைபாதை, சாக்கடை வசதியின்றி, குப்பைக்கழிவுகள் தேங்கி கிடக்கிறது. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், நகராட்சியில் வளர்ச்சி பணிகளுக்காக கோடிக் கணக்கில் பணம் செலவிடப்படுகிறது.ஆனால், நகராட்சிக்கு வரி செலுத்தும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை.எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:வால்பாறை எஸ்டேட்களில், பல ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், ரோடு, கழிப்பிடம், படிக்கட்டு, தெருவிளக்கு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கவில்லை.ஆண்டு தோறும் சம்பளத்தில் தொழில்வரி, பிடித்தம் செய்து, நகராட்சிக்கு செலுத்தப்படுகிறது. எனவே, வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளிலும் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நகராட்சி சார்பில் செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X