அரசு பஸ்களுக்கு 'ரிசர்வேஷன்' ரத்து: பயணிகள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
05:18

வால்பாறை:அரசு பஸ்களில், 'ரிசர்வேஷன்' முறை திடீரென்று ரத்து செய்யப்பட்டதால், வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பொள்ளாச்சி, கோவை, பழநி மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில், 38 பஸ் இயக்கப்படுகிறது.வால்பாறையில் தனியார் பஸ் இல்லாத நிலையில், அரசு பஸ்களையே மட்டுமே மக்கள் நம்பியுள்ளனர்.


இந்நிலையில், வெளியூர் செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால், பொள்ளாச்சி, கோவை, பழநி செல்லும் பஸ்களுக்கு பழைய பஸ் ஸ்டாண்டில், 'ரிசர்வேஷன்' செய்யப்பட்டது.இதற்காக, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன், 11 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டது. இருப்பினும் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் நிம்மதியாக செல்ல வெளியூர் செல்லும் பயணிகளும், சுற்றுலாபயணிகளும் இந்த வசதியை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பஸ் கட்டண உயர்வை காரணம் காட்டி, 'ரிசர்வேஷன்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.


குறிப்பாக, குழந்தைகளும், முதியவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி, வால்பாறையில் மீண்டும் 'ரிசர்வேஷன்' முறையை கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழகத்தில் திடீர் பஸ் கட்டண உயர்வால் 'ரிசர்வேஷன்' முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்டணம் நிர்ணயம் செய்த பின், 'ரிசர்வேஷன்' முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில், செயல்பாட்டிற்குவரும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X