பனிமூட்டம் அதிகரிப்பால் வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
05:23

வால்பாறை:வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், பல்வேறு இடங்களில் காலை, மாலை நேரத்தில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாக துவங்கியது. ஆரம்பத்தில், கனமழையாக பெய்தது.


கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்து வருகிறது.இதனால், அணைகளின் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சோலையாறு அணையில் இருந்து, பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.வால்பாறையில் பரவலாக பெய்யும் மழையால், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் பல இடங்களில் பனி மூட்டம் காணப்படுகிறது. கவர்க்கல் எஸ்டேட் பகுதியில், வழக்கமாக பனி படரும் மலைமுகடுகளில், நாள் முழுவதும் பனி மூட்டம் படர்ந்து விடுகிறது.இதனால், பகல் நேரத்திலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்டு, வாகனத்தை இயக்குகின்றனர்.


பனி படர்ந்த பகுதிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசிக்கின்றனர்.அணைகளின் நீர்மட்டம்பருவமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையில், நேற்று காலை நிலவரப்படி, 31.76 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்திருந்தது. அணைக்கு வினாடிக்கு, 188 கனஅடி நீர்வரத்தும், 525 கனஅடி வெளியேற்றமும் இருந்தது.பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், 14.05 அடி நீர்மட்டம் இருந்தது. அதிகபட்சமாக சோலையாறு அணையில், 9 மி.மீ., மழை பெய்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X