கோவைக்கு கூடுதல் ரயில் இயக்கணும்! பயணிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
05:26

பொள்ளாச்சி;'பொள்ளாச்சி - கோவை ரயிலை ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயக்க வேண்டும்; கோவைக்கு கூடுதலாக, டி.இ.எம்.யு., ரயில் இயக்க வேண்டும்,' என பயணிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஸ்டாலின், ஒருங்கிணைத்தார். பொருளாளர் ராமகிருஷ்ணன் நிதி நிலை அறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கும் மதுரை - கோவை பயணிகள் ரயில், பழநி வரை நிரந்தர ரயிலாக, 567060 என்ற எண்ணிலும், அதன்பின், கோவை வரை தற்காலிக ரயிலாக, 067069 என்ற எண்ணிலும் இயக்கப்படுகிறது. இதனால், பயணிகளிடையே குழப்பம் ஏற்படுகிறது. இரு எண்ணில் ஒரே ரயில் இயக்குவதை தவிர்த்து, ஒரே எண்ணில் இயக்க வேண்டும்.பொள்ளாச்சி - கோவை ரயிலை நிரந்தரமாக்கி, ரயில் வேகத்தை அதிகரித்து, மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும். மேலும், இந்த ரயில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயக்க வேண்டும்.பொள்ளாச்சி - கோவை ரோட்டில் மேம்பால பணிகள் காரணமாக, பஸ்களில் பயண தொலைவு, பயண நேரம் மற்றும் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால், பயணிகள் ரயிலை அதிகம் நாடுகின்றனர்.பயணிகள் வசதிக்காக, தற்போது உள்ள ரயில் நேரங்களுக்கு இடையே, டி.இ.எம்.யு., ரயில் (டீசல், எலக்ட்ரிகல் மல்டிபிள் யுனிட் ரயில்) இயக்க வேண்டும்.திண்டுக்கல் - பொள்ளாச்சி, பொள்ளாச்சி - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனுார் ரயில்பாதை மின்மயமாக்கல் பணியை விரைந்து துவங்க வேண்டும்.பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தில் ரயிலின் வேகத்தை அதிகரிக்க சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. வேகம் அதிகரிக்கும் போது, பயணிகள் நலன் கருதி, காலை கோவை சென்றடையும் நேரம் மற்றும் மாலை கோவையில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யக்கூடாது.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், பயணிகள் அலைச்சலை தவிர்க்க, பிளாட்பார்ம் எண்கள் அறிவிப்பு பலகை மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும் பிளாட்பார்ம்களில், ரயில்களின் எந்த பெட்டி எங்கு நிறுத்தப்படும் என்ற 'ரிசர்வேஷன் கோச் பொசிஷன்' அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.'அன் ரிசர்வ்ட்' ரயில் டிக்கெட்டை, வரிசையில் நிற்க தேவையின்றி, மொபைல்செயலி மூலமாகவே வாங்க உதவும், 'யு.டி.எஸ்.,' செயலி குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவையுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள், ரயில் பயணிகள், ரயில்வே ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
16-ஜூலை-201915:02:49 IST Report Abuse
Ram மூன்று கோட்ட அதிகாரிகளின் மத்தியில் மாட்டிக்கொண்டு பொள்ளாச்சி அவதிப்படுகிறது. இராமேஷ்வரத்திலிருந்து கோவைக்கு இரயிலில் சொகுசாக வந்த மீன்கள் தற்போது லாரிகளில் காய்ந்து கருவாடாக வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X