சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
05:35

எறையாமங்கலம்:எறையாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவ - மாணவியர் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.


கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது எறையாமங்கலம் ஊராட்சி. இங்கு, பழைய நுாலகத்தில் இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தற்போது, மேல்நல்லாத்துார் செல்லும் நெடுஞ்சாலையோரம், 1.60 கோடி ரூபாய் மதிப்பீல் கட்டப்பட்ட, புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.மூன்று தளங்கள் கொண்ட இந்தப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, ஐந்து வகுப்பறைகள், ஒரு தலைமையாசிரியர் அறை, அலுவலகம், நுாலகம், ஓவியம், கணினி அறை மற்றும் ஆசிரியர்களுக்கு இரு அறை என, மொத்தம், 12 அறைகளுடன், புதிய பள்ளி இயங்கி வருகிறது.ஆனால், இப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில், அரசு பஸ், தனியார் தொழிற்சாலை பஸ், கனரக வாகனங்கள் என, 500க் கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.


மேலும், சுற்றுச்சுவர் கட்டப்படாததால், பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வகையில், விளையாட்டு மைதானமும் அமைக்க வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட கல்வி துறை அதிகாரிகள், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் கட்டவும், விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X