| பஞ்சு கோடவுனில் தீ விபத்து Dinamalar
பஞ்சு கோடவுனில் தீ விபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
06:46

கோபால்பட்டி:கோபால்பட்டி அருகே காந்தி நகர் பழனிச்சாமி. இலவம் காய்களை வாங்கி பஞ்சு பிரித்து விற்பனை செய்து வருகிறார். தனது வீட்டருகில் சிறிய கோடவுன் வைத்துள்ளார். இலவம் காய்கள் மற்றும் பஞ்சு முடைகளை கோடவுனில் இருப்பு வைத்திருந்தார். நேற்று அதிகாலை கோடவுனில் மர்மமான முறையில் தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பழனிச்சாமி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நத்தம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூடைகள் தீயில் எரிந்து நாசமாகின. சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X