| கமிஷனர் வந்தார் சென்றார் Dinamalar
கமிஷனர் வந்தார் சென்றார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
06:49

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக பதவி வகித்து வந்த மனோகர் கடந்த மார்ச் 31 ல் ஓய்வு பெற்றார். பொறியாளர் பாலச்சந்திரன் கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் மாநகராட்சி புதிய கமிஷனராக காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை கமிஷனராக பொறுப்பேற்க வந்ததாக தெரிகிறது. மாநகராட்சி அலுவலர்கள் அவரை வரவேற்றனர். இரண்டு மணி நேரம் மட்டுமே அலுவலகத்தில் இருந்தவர் மீண்டும் சென்னை கிளம்பி சென்றார்.அலுவலகம் வந்த சில மணி நேரங்களிலேயே புதிய கமிஷனர் புறப்பட்டு சென்றது அலுவலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்ட போது, வாயை திறக்காமல் நழுவி சென்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X