| நிறுத்தப்பட்ட அரசு பஸ்‛ 'கல்லா' கட்டும் ஆட்டோக்கள் Dinamalar
நிறுத்தப்பட்ட அரசு பஸ்‛ 'கல்லா' கட்டும் ஆட்டோக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
06:49

சின்னாளபட்டி:செம்பட்டி-சின்னாளபட்டி இடையே இரவு நேர கடைசி அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால், ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது.சின்னாளபட்டி பேரூராட்சி, இதனைச்சுற்றியுள்ள குக்கிராமங்களை சேர்ந்த பலர் செம்பட்டி, நிலக்கோட்டை, ஆத்துார், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர். இரவு பணி முடிந்து திரும்பும் நிலையில், செம்பட்டியில் இருந்து போதிய போக்குவரத்து வசதி இல்லை. திண்டுக்கல்லில் இருந்து சின்னாளபட்டி வழியே செம்பட்டி வரை சென்று, மீண்டும் இதே தடத்தில் இரவு 9:10 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. சில மாதங்களாக, இந்த பஸ் சின்னாளபட்டி வரை மாற்றியமைக் கப்பட்டுள்ளது. இரவு 8:45 மணிக்குப்பின், சின்னாளபட்டி செல்ல பஸ் வசதியற்ற சூழல் நிலவுகிறது. இதை பயன்படுத்தி, ேஷர் ஆட்டோக்களில் கட்டண கொள்ளை நடக்கிறது. பகலில் 10 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், இரவு நேரங்களில் 50 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இத்தடத்தில் நிறுத்தப்பட்ட பஸ் வசதியுடன், இரவு 10:௦௦ மணிக்கு கூடுதலாக டவுன்பஸ் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் முன்வர வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X