| தொடர் மழைக்கு வரவேற்பு Dinamalar
தொடர் மழைக்கு வரவேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
06:51

இரவு நேரத்தில் பெய்து வந்த மழை, நேற்று, மாலையிலேயே கொட்டித் தீர்த்தது. தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி சுற்றுப்பகுதியில், நேற்று மாலை, பலத்த மழை பெய்தது. தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் விதமாக, பெய்து வரும் தொடர் மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,கடந்த வாரம், இரவு நேரத்தில் பெய்த மழையால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று, மாலை, 5:00 மணிக்கு பெய்த மழையால், திருத்தணி தினசரி சந்தைக்கு வந்த பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, சந்தையில் சிக்கி தவித்தனர்.ஆனாலும், தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதமாக பெய்து வரும் இந்த தொடர் மழைக்கு, பொதுமக்களிடையே பலத்த வரவேற்பு உள்ளது.

- -நமது நிருபர்- -


 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X