| குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது Dinamalar
குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
06:52

போடி:போடி பகுதியில் மழையின்றி குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், பெருமாள்கவுண்டன்பட்டி மெயின் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.


உப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் உப்புக்கோட்டையிலிருந்து குழாய் அமைக்கப்பட்டு போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாள்கவுண்டன்பட்டி, அம்மாபட்டி, சுந்தரராஜபுரம், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. போடி பகுதியில் மழையில்லாததால் கண்மாய்கள் நீரின்றி வறண்டு சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் பெருமாள்கவுண்டன்பட்டி மெயின்ரோடு, பெருமாள்கவுண்டன்பட்டியிலிருந்து குண்டல்நாயக்கன்பட்டி செல்லும் மெயின் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் குடிநீர் குழாய் சேதமடைந்து 15 நாட்களுக்கும் மேலாகிறது. அதனை அம்மாபட்டி ஊராட்சி மற்றும் குடிநீர் வடிகால்வாரியம் சீரமைக்காததால் குடிநீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலைத் தேக்க தொட்டியில் குடிநீரை சேமிக்கவும், மக்களுக்கு போதுமான அளவு சப்ளை செய்வதிலும் சிக்கல் உள்ளது. இதனை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X