| ரூ.5 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைப்பதில் தாமதம் Dinamalar
ரூ.5 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைப்பதில் தாமதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
06:52

பெரியகுளம்:பெரியகுளத்தில் ஏ.டி.எம். மையத்தில் கண்டெடுத்த ரூ.5 லட்சத்திற்கு யாரும் உரிமை கோரிவரவில்லை. இதனால் போலீசார் உரியவர்களிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ஆகிறது. பெரியகுளம் வடகரை குட்டியப்பர்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 41. போடி அரசு பஸ் பணிமனையில் மெக்கானிக்காக ஆக உள்ளார். பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் நேற்று முன்தினம் பணம் எடுக்க சென்றார். அங்கிருந்து திரும்பிய போது ரூ.500 கட்டு 10 கட்டுகள், மொத்தம் ரூ.5 லட்சம் பண்டலாக கட்டப்பட்டு நிலையில் கிடந்தது. அதனை மணிகண்டன் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என விரும்பினார். பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் சுரேஷிடம் பணத்தை ஒப்படைத்தார்.பாஸ்கரன் எஸ்.பி.,, மணிகண்டனை பாராட்டினர். சிக்கல்ரூ.5 லட்சம் யாருடையது என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று முன்தினம் பணம் தவறவிட்டு நேற்று வரை சரியான விளக்கங்களுடன் யாரும் போலீஸ்ஸ்டேஷக்கு வரவில்லை.போலீசார் கூறுகையில், ' பணம் நிரப்பும் தனியார் ஏஜென்ஸிகள் யாரும் முறையான ஆவணங்களுடன் பணம் கேட்டு வரவில்லை. ஏ.டி.எம்., மையத்தில் கேமராவில் பதிவான கட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். சரியான ஆதாரங்களுடன்வந்து கேட்டால் அவர்களிடம் ரூ.5 லட்சம் ஒப்படைக்கப்படும் ,'என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X