கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
07:04

ராமநாதபுரம்:ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகி மது அருந்தும் பாராக மாறி வருவதால் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.ராமநாதபுரம் சேதுபதி நகர் பகுதியில் கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளது.


இங்கு பழைய, புதிய கலெக்டர் அலுவலகங்கள், எஸ்.பி., அலுவலகம், டி.ஐ.ஜி., அலுவலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. நுழைவு வாயிலில் கேணிக்கரை போலீஸ் ஸடேஷனும் உள்ளது. இந்த வளாகப் பகுதிகளை சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்தும் பாராக மாற்றி வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து முக்கிய அலுவலகங்கள் இருந்தும் இரவில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுவதில்லை.இதனை பயன்படுத்தி எந்த தொந்தரவும் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் ஆங்காங்கே கும்பலாக சேர்ந்து மது அருந்தி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் ராமநாத புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி மது பாட்டில்கள் கிடப்பதை பார்த்த கலெக்டர் அதிகாரிகளை கண்டித்தார்.


ஆனால் அவரது அலுவலக வளாகமே மது பாராக மாறிய இதுவரை கண்டுகொள்ளவில்லை. இப்பகுதியில் எஸ்.பி., டி.ஐ.ஜி., அலுவலகங்கள் இருந்தும். தைரியமாகமது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர்.இங்கு சிதறி கிடக்கும் காலி மது பாட்டில்களை பார்த்து பகலில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருபவர்கள் அச்சமடைகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகமே மது பான பாராக மாறியுள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.


இதே பகுதியில் கடந்த ஆண்டு கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன், டி.ஜ.ஜி., அலுவலகம், முதன்மை நீதிபதி வீட்டருகே வெடிகுண்டு வீசி, இரு ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்படுத்தி, இது போன்ற சமூக விரோத செயல்கள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X