| நடுக்கடலில் நெஞ்சுவலி நாரையூரணி மீனவர் பலி Dinamalar
நடுக்கடலில் நெஞ்சுவலி நாரையூரணி மீனவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
07:15

ராமேஸ்வரம்:உச்சிப்புளி அருகே நாரையூரணியை சேர்ந்த மீனவர் பிரபாகரன் 35. இவர் ராமேஸ்வரம் அருகே மண்டபம் தென் கடலோரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

நேற்று காலை மண்டபத்தில் இருந்து விசைப்படகில் சக மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றார். அப்போது நடுக்கடலில் மீன்பிடித்த போது திடீரென பிரபாகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். பின் சிகிச்சைக்காக படகை கரை திருப்பிய போது படகிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த மண்டபம் போலீசார், மீன்துறையினர் மீனவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X