தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் 6,187 மரங்கள் 'காலி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
07:17

ராமநாதபுரம்:பரமக்குடி அருகே திருநகர் பகுதியை சேர்ந்தவர் என்.சேகரன். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காரைக்குடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் குறித்து கேட்டிருந்தார்.அதில் என்.எச்.49 ல் மதுரை -பரமக்குடி வரையிலான நான்குவழிச்சாலைக்கும், பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை இரு வழிச்சாலை அகலப்படுத்தும் பணிக்கும் 1134.35 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பணிகள் செய்யப்பட்டுள்ளது. திட்டம் நிறைவு செய்யப்பட வேண்டிய நாள் 2017 நவ., 15. ஆனால் பணிகள் தாமதமாகியது. காரணம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்வதிலும், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் பணிகள் தாமதம் ஆனது. சாலை அகலப்படுத்தும் பணியின் போது 6,187 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மரங்களுக்கு வனத்துறை மதிப்பீடு செய்து, ஆர்.டி.ஓ., அனுமதியுடன் வெட்டி அகற்றப்பட்டன. ஒவ்வொரு மரத்திற்கும் பதில் 3 மரங்கள் நடவு செய்யப்பட வேண்டும், என்ற நிபந்தனையுடன் அகற்றப்பட்டது. மரங்கள் நடவு செய்யும் பணிகள் துவக்கப்படும், என வழங்கப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெட்டி அகற்றப்பட்ட மரங்களுக்கு பதில் மரக்கன்றுகளை மறு நடவு செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இந்தப்பணிகளை விரைவாக செய்ய வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X