| வறட்சியான மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மையை ஆராய நடவடிக்கை Dinamalar
வறட்சியான மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மையை ஆராய நடவடிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
07:17

ராமநாதபுரம்:வறட்சியான மாவட்டங்களில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உபயோகமானதா என ஆய்வு மேற்கொண்டு 2020 மார்ச் இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் வறட்சி நிலவுகிறது. மத்திய நிலத்தடி நீர் ஆய்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட மே மாத அறிக்கையில் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பல மாவட்டங்களில நிலத்தடி நீர்தான் குடிப்பதற்கும் மக்கள் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வறட்சியான மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் குடிக்க தகுதியானதா என ஜூலை 1 முதல் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 3,150 கிராமங்களில் இதற்கான ஆய்வு துவக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் சோதனைக்கானஆயத்த பணிகள் துவங்கியுள்ளதாகவும், அடுத்தாண்டு 2020 மார்ச் இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குடிநீர் வடிகால் வாரியஅதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X