ஆலங்குடியில் 2 பிரிவினர் மோதல்: இருவருக்கு அரிவாள் வெட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
07:43

புதுக்கோட்டை: ஆலங்குடியில், இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில், இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பதற்றத்தை தணிக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், பிளக்ஸ் பேனர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர், முருகானந்தம், 37.இந்து முன்னணி நகர தலைவரான இவருக்கும், முஸ்தபா, 20, என்பவருக்கும், ஒரு வாரத்துக்கு முன், ஆலங்குடியில், பிளக்ஸ் வைப்பது தொடர்பாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர், தாக்கிக் கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, முஸ்தபா, அவரது சகோதரர் ரகுமான், 23, நண்பர்கள் முகமதுகனி, 19, முகமது நியாஸ், 21, அப்பாஸ், 20, கணேசன், 22, மணிகண்டன், 22, ஆகியோர், பிளக்ஸ் பேனர் நிறுவனத்துக்கு சென்று, அங்கிருந்த முருகானந்தத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர்.தடுக்க முயன்ற, அவரது தந்தை கணேசனையும், அரிவாளால் வெட்டி, தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த இருவரும், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த முருகானந்தம் உறவினர்கள் சிலர், முஸ்தபா தரப்பினரின் கடைகளை அடித்து நொறுக்கினர். திருச்சி, டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன், எஸ்.பி., செல்வராஜ் ஆகியோர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.மோதல் தொடர்பாக, இரு தரப்பினர் மீதும், ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, முகமது கனி, முகமது நியாஸ் ஆகியோரை, கைது செய்துள்ளனர்.


இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, தனியார் பஸ்சில் புதுக்கோட்டை சென்ற முஸ்தபாவை, அதே பஸ்சிலிருந்த சிலர், திருவரங்குளம் வனப்பகுதியில் இறக்கி, பலமாக தாக்கி, தப்பிச் சென்று விட்டனர்.படுகாயமடைந்த முஸ்தபா, புதுகை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.இரு தரப்பினரும், மாறி மாறி மோதிக் கொள்வதால், ஆலங்குடியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, பதற்றம் நிலவுகிறது. நூற்றுக்கனக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முருகானந்தம், அவரது தந்தையை சந்தித்து நலம் விசாரிக்க, இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள், திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று காரில் கிளம்பினர். அவர்களை போலீசார், துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில் தடுத்து, கைது செய்தனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X