காரைக்கால் மாங்கனி திருவிழா துவங்கியது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

16 ஜூலை
2019
17:19
பதிவு செய்த நாள்
ஜூலை 16,2019 07:54

புதுச்சேரி : காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாங்கனித் திருவிழா தொடங்கியது.



புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ளது இந்த காரைக்கால் அம்மையார் கோவில். இங்கு ஆண்டுதோறும் இந்த மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த விழா இன்று (ஜூலை 16) வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. பக்தர்கள் ஒருவருக்கொருவர் மாங்கனிகளை வாரியிறைத்து உற்சாகமாக கொண்டாடினர்.








காரைக்கால் அம்மையார் :




பேயுருவம் பெற்ற அன்னை, 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.




இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா இன்று காலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. நாளை பரமதத்தருக்கும், ஸ்ரீபுனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.








முத்துச்சிவிகை வீதியுலா :




பின்னர், ஈசன் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி உலா நடைபெறும். இரவு புனிதவதியாரும், பரமதத்தரும் தம்பதிகளாக முத்துச் சிவிகையில் வீதியுலா வருவர். பிச்சாண்டவர் மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கும்.








மாங்கனி வீசி வழிபாடு




பரமசிவன் அடியார் கோலத்துடன் பவளக்கால் விமானத்தில் அமர்ந்து வீதியுலா நடக்கிறது. காலை 7 மணிக்கு ஈஸ்வரன், காரைக்கால் அம்மையிடம் பிட்சை வாங்கி உண்ட சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் புறப்பட்டு திருவீதி உலா சென்றார்.





குழந்தை வரம் :




அப்போது நகரெங்கும் கூடியிருக்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைத்து அருள்பெறுவார்கள். குழந்தை வரம் கிடைக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டு மாங்கனி பெறுபவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பின்னர் மாலையில், ஈசனுக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.




 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pachaiappan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூலை-201917:31:52 IST Report Abuse
pachaiappan இதில் போய் ஏன் ஏசுவை வம்புக்கு இழக்க வேண்டும். அவர் சாகும் போது ஏலி ஏலிமா சபக்தானி (ஹீபரூ முழி) என்னை ஏன் கை விட்டீர் கடவுளே என்று கத்தியதாக யூதர் புழிகி வைத்தனர்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
16-ஜூலை-201915:11:15 IST Report Abuse
Sridhar Rengarajan புனிதவதி என்ற காரைக்கால் அம்மையார் பதினோராம் நூற்றாண்டில் சோழர் காலத்திலேயே துறைமுகமாக விளங்கிய காரைக்காலில் தனதத்தன் செட்டியார், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார். பரமதத்த செட்டியார் என்பவரை மணமுடித்தவர். மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன. இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து குழந்தை வரம் வேண்டி காரைக்கால் வந்து மாங்கனி திருவிழாவன்று மக்கள் இறைக்கும் மாங்கனியை பெறுவதும், குழந்தை பிறந்ததும் வந்து மாங்கனியை இறைப்பதும் காரைக்காலில் மட்டுமே நடக்கும் சிறப்பு.
Rate this:
Share this comment
Cancel
16-ஜூலை-201914:33:57 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அம்மையாரின் தரிசனம் கிடைக்க கோடிபுண்ணியம், திருவாலங்காடு சிவன் கோவிலுக்கு வந்து பாடியிருக்கிறார், விழாவில் பங்கெடுத்திருக்கிறார் என்று குறிப்பு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X