| ஊரக திறனாய்வு தேர்வு விண்ணப்பம் வரவேற்பு Dinamalar
ஊரக திறனாய்வு தேர்வு விண்ணப்பம் வரவேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
08:12

சேலம்: சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரக பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டு தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. தேர்வு கட்டணம், ஐந்து ரூபாய், சேவைக்கட்டணம், ஐந்து ரூபாய் என, 10 ரூபாயை கட்டணமாக, தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்கள் வழங்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, வரும், 27 கடைசி நாள். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்வு செய்யப்படும், 100 மாணவ, மாணவியருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு, தலா, 1,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். தேர்வில், கறுப்பு நிற பால்பாயின்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X